/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 303 பேர்களுக்கு பணி நியமன ஆணை
/
வடலுாரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 303 பேர்களுக்கு பணி நியமன ஆணை
வடலுாரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 303 பேர்களுக்கு பணி நியமன ஆணை
வடலுாரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 303 பேர்களுக்கு பணி நியமன ஆணை
ADDED : ஜன 27, 2025 12:56 AM

கடலுார்; வடலுாரில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 22 மாற்றுத்திறனாளிகள் உட்பட 303 பேர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
வடலுாரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 103 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.பின் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் அமைச்சர் பன்னீர்செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது:
மகளிர் திட்டம் சார்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. கடலுார் மாவட்டம் அதிக கிராம பகுதிகளை கொண்டது, கிராமபகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறுவதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதுடன், வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என்றார்.
முகாமில் 1475 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். இதில் 103 தனியார் நிறுவனங்களை சார்ந்த வேலையளிப்போர் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தி 22 மாற்றுத்திறனாளிகள் உட்பட 303 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வடலுார் நகரமன்றத் தலைவர் சிவக்குமார், கடலுார் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஜெயசங்கர், உதவி அலுவலர்கள் நிலவழகி, ராஜேஷ்குமார், சிவா, பேபி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.