ADDED : அக் 05, 2025 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மற்றும் சர்வோதய சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
பள்ளியில் நடந்த விழாவில், தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பத்தாகான், பசுபதி, கணேசன் பங்கேற்றனர். காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதேசி பொருட்களை ஆதரித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.