ADDED : நவ 16, 2025 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை மற்றும் கடலுார் சூழலியல் இயக்கங்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் செயின்ட் ஆன்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி னார்.
அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் மருதவாணன், மாநில வரி அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழாவில், கத்தோலிக்க துறவியர் பேரவை நிர்வாகிகள் ஜான்தாஸ், ஜான்சி, சாலமோன், ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியராஜ், விமல், பீட்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

