/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு
/
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு
ADDED : நவ 21, 2024 05:56 AM
கடலுார்: கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி ஓவியப் போட்டி நடந்தது. 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 'நீர்நிலை பாதுகாத்தல்' என்ற தலைப்பிலும், 8 மற்றும் 9ம் வகுப்பினருக்கு 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டி நடந்தது.
மாவட்டத்தி்ல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவில், அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா வரவேற்றார்.
மாநகர தமிழ்ச்சங்க தலைவர் சுதர்சனம், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் மனோகரன் வாழ்த்தி பேசினார்.