/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுத் தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசு
/
பொதுத் தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 13, 2025 03:40 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பொதுத்தேர்வுகளில் சாதனைப் படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2024-2025ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, ரங்கநாதன செண்பகவல்லி நுாற்றாண்டு நினைவு அறக்கட்டளை மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பரிசு வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சரவணகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அன்வர் பாஷா வரவேற்றார். விழாவில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 3 மாணவர்களுக்கு தலா 3,000 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை அறக்கட்டளை தலைவர்கள் நடராஜன், பரமசிவம் வழங்கினர்.
மேலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், முதுகலை ஆசிரியர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதுகலை ஆசிரியர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.