/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வருவதில்... சிக்கல்: ரூ.100 கோடியில் விரிவாக்கம் செய்தும் பயனில்லை
/
மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வருவதில்... சிக்கல்: ரூ.100 கோடியில் விரிவாக்கம் செய்தும் பயனில்லை
மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வருவதில்... சிக்கல்: ரூ.100 கோடியில் விரிவாக்கம் செய்தும் பயனில்லை
மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வருவதில்... சிக்கல்: ரூ.100 கோடியில் விரிவாக்கம் செய்தும் பயனில்லை
ADDED : செப் 08, 2025 02:58 AM

கடலுார்: கடலுார் உப்பனாற்றுங்கரையில் ரூ.100 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகம் திறந்து வைத்தும் மீனவர்களுக்கு பயன்படாத நிலை உள்ளது.
கடலுார் மாவட்டத்தில் , புதுச்சேரி அருகே தமிழக எல்லையான நல்லவாடு துவங்கி, சிதம்பரம் டி.எஸ்.பேட்டை வரையில் 49 மீனவ கிராமங்கள் உள்ளடக்கி உள்ளன. இப்பகுதி மீனவர்கள் 250 விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள், கட்டுமரங்கள் உட்பட 2,500 படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈ டுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்பட் டு வருகிறது.
கடலுார் துறைமுகம் அருகே இயங்கி வந்த மீன்பிடி துறைமுகம் போதிய இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், நகருக்குள் மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, முதுநகர் மீன்வளத்துறை அலுவலகம் அருகே உப்பனாற்று கரையில், மீன்பிடி துறைமுகத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மீனவர் கட்டமைப்பு வளர்ச்சி நிதி (எப்.ஐ.டி.எப்) 100 கோடி ரூபாயில் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 'ப' வடிவிலான மீன் இறங்கு தளம், படகு அணையும் தளம், மீன் ஏல கூடங்கள், சோலார் வசதியுடன் மீன் உலர் களம், மீனவர்கள் ஓய்வு அறை, ஐஸ் லேன், டீசல் பங்க், வலை பின்னும் கூடங்கள், நீர்தேக்கத் தொட்டி, படகுகள் பழுது பார்க்கும் இடம், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் நவீன முறையில் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.
பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடந்த மே மாதம் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இருப்பினும், மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை துறைமுகத்தில் இறக்க முடியாத நிலையி ல் உள்ளது.
இதற்கு மீன்பிடி துறைமுகம் அருகே உப்பனாற்றில் படகுகள் வரும் அளவிற்கு ஆழப்படுத்தாததால் பெரிய விசைப்படகுகள் துறைமுகத்தில் அணைய முடியாததே காரணமாகும். அதனால் 100 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட துறைமுகம் பயன்படுத்த முடியாமல் பயனில்லாமல் உள்ளது.
கடலில் துாண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுத்தால்தான் கடலில் பிடிக்கப்படும் மீன்களை துறைமுகத்திற்கு கொண்டு வர முடியும். அப்போதுதான் முறையாக ஏலம் விடவும், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.