அனுமதியின்றி ஊர்வலம்: அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஊர்வலம்: அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஜன 22, 2025 09:47 AM
அ நிறம் | அளவு
கடலுார் : கடலுாரில் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக, அ.தி.மு.க.,வினர் 120பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சம்பத் மகன் பிரவின் பிறந்தநாளையொட்டி, நேற்று முன்தினம் கடலுார் திருவந்திபுரம் ரோட்டில் அ.தி.மு.க.,வினர் பைக் மற்றும் கார்களில் ஊர்வலமாக சென்றனர்.
அனுமதியின்றிபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அ.தி.மு.க.,நிர்வாகி செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் உள்ளிட்ட 40பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக, அ.தி.மு.க.,பகுதி செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 80பேர் மீது, கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
