/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இடைத்தரகரின்றி கரும்பு கொள்முதல்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
/
இடைத்தரகரின்றி கரும்பு கொள்முதல்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
இடைத்தரகரின்றி கரும்பு கொள்முதல்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
இடைத்தரகரின்றி கரும்பு கொள்முதல்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
ADDED : ஜன 05, 2024 06:28 AM

கடலுார் : பொங்கல் பரிசு தொகுப்புக்கு, இடைத்தரகர்கள் இன்றி கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை சார்பில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை கடலுார் சுபலட்சுமி திருமண மண்டபத்தில் துவங்கியது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி உதவி இயக்குனர் விஜயராணி வரவேற்றார். அமைச்சர் பன்னீர்செல்வம், கண்காட்சியை திறந்து வைத்தார். மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின், அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு வழங்கப்ட உள்ளது. கரும்பு கொள்முதல் விலை 33 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கூட்டுறவுத் துறை மூலமாக கண்காணிக்கப்பட்டு கரும்பு கொள்முதல் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு 2 கோடியே 19 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
கரும்பு அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்களில் இருந்து தேவைப்படும் மற்ற மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்படும். கடந்தாண்டு போலவே இடைத்தரகர்கள் பிரச்னையின்றி கரும்பு கொள்முதல் செய்யப்படும்' என்றார்.