/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 22, 2025 08:09 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 16வது மாநாடு ஆக., 18ம் தேதி சிதம்பரத்தில் நடக்கிறது. இதனை முன்னிட்டு மாநாட்டுக்கான வரவேற்பு குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
சங்க துணைத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஜானகிராஜா, மாவட்ட செயலாளர் பால்கி, மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டிற்கு வரவேற்புக் குழு அமைப்பது. மாநாட்டு வேலை பகிர்வதற்கான குழுக்கள் அமைப்பது குறித்து பேசப்பட்டது. மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக சிதம்பரம் நகராட்சி துணைத் தலைவர் முத்துக்குமரன், செயலாளராக சங்க செயலாளர் ராகவேந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.