/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.6.68 கோடியில் திட்டப் பணி; கடலுார் மேயர் அடிக்கல்
/
ரூ.6.68 கோடியில் திட்டப் பணி; கடலுார் மேயர் அடிக்கல்
ரூ.6.68 கோடியில் திட்டப் பணி; கடலுார் மேயர் அடிக்கல்
ரூ.6.68 கோடியில் திட்டப் பணி; கடலுார் மேயர் அடிக்கல்
ADDED : மார் 08, 2024 06:38 AM

கடலுார்: கடலுாரில் 6 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளுக்கு மேயர் சுந்தரி ராஜா அடிக்கல் நாட்டினார்.
கடலுார் மாநகராட்சி சார்பில் குண்டு சாலையில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டல அலுவலகம்-1, கட்டப்பட உள்ளது. இதற்கு மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் காந்திராஜ் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, புதுப்பாளையம் மீன் மார்க்கெட் வளாகத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டல அலுவலகம்-2, கட்டடத்திற்கும், வன்னியர்பாளையம் மேட்டுத் தெருவில் கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், ஆராமுது, செந்தில்குமாரி இளந்திரையன், முன்னாள் கவுன்சிலர் செந்தில் உடனிருந்தனர்.

