/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணத்தில் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
ஸ்ரீமுஷ்ணத்தில் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 19, 2024 11:35 PM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் ஒருநாள் திட்டத்தின் கீழ், இரண்டாவது நாளாக நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு பணி மேற்கொண்டார்.
ஸ்ரீமுஷ்ணத்தில் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு குமாரக்குடியில் இருந்து ஆய்வு பணியை துவக்கிய கலெக்டர், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 10 கிராமங்களுக்கு நேரில் சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
இரவு ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிற்படுத்தப்பட்டோர் நல மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளை ஆய்வு செய்தார். இரவு 11:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீமுஷ்ணம் சுற்றுலா மாளிகையில் இரவு தங்கிய கலெக்டர், நேற்று அதிகாலை 5:45 மணிக்கு ஆவின் பால் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டார்.
பின்னர், நகரில் துப்பரவு பணிகளை பார்வையிட்டு, திடக்கழிவு மேலாண்மை அடிப்படையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
காலை 7:00 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
ஆய்வின்போது பேரூராட்சிகள் துணை இயக்குனர் வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், செயல் அலுவலர் யசோதா, ஆத்மா திட்டக்குழு தலைவர் தங்கஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சேர்மன் செல்விஆனந்தன், துணைத் தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.