/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சியில் சொத்துவரி, பெயர் மாற்றம்; முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்
/
மாநகராட்சியில் சொத்துவரி, பெயர் மாற்றம்; முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்
மாநகராட்சியில் சொத்துவரி, பெயர் மாற்றம்; முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்
மாநகராட்சியில் சொத்துவரி, பெயர் மாற்றம்; முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்
ADDED : ஜூன் 11, 2025 07:53 PM
கடலுார்; கடலுார் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, காலிமனை வரி, பெயர் மாற்றம் போன்றவை தொடர்பாக கீழ்கண்ட முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் அனு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடைக்கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்கள், பெயர்மாற்றம், புதிய வரிவிதிப்புகள் தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதற்கும், கோரிக்கைகளை பெறுவதற்கும் வரியினை செலுத்துவதற்கும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
எனவே கீழ்கண்ட சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்து வரும் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், பாதள சாக்கடைக் கட்டணம், தொழில்வரி, வயில்லா இனங்கள் மற்றும் சொத்துவரி பெயர்மாற்றம், புதிய வரிவிதிப்புகள் செய்வதற்கான படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்கள் தொடர்பான புகார் மனுக்கள் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
8 மற்றும் 9 ம் வார்டுகளில் 14.6.2025 ம் தேதி கருமாரப்பேட்டை மாநகராட்சி துவக்கப்பள்ளியிலும், 18, 19 வார்டுகள் 21.06.2025ம் தேதி வன்னியர்பாளைம் மாநகராட்சி துவக்கப்பள்ளியிலும், 43, 44, 45 வார்டுகள் 28.6.2025ம் தேதி சீமான் தோட்டம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 31, 32 வார்டுகள் 05.07.2025ம் தேதி வண்டிப்பாளயைம் மாநகராட்சி துவக்கப்பள்ளியிலும், 20, 21வது வார்டுகள் 19.07.2025ம் தேதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி புதுப்பாளையத்திலும், 10, 11, 12, 13 வார்டுகள் வரும் 26.07.2025 ம் தேதி நேருநகர் சமுதாயக் கூடத்திலும் நடக்கிறது. பொது மக்கள் மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.