/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியுடன் எல்.என்.,புரத்தை இணைப்பதை எதிர்த்து மறியல்
/
பண்ருட்டியுடன் எல்.என்.,புரத்தை இணைப்பதை எதிர்த்து மறியல்
பண்ருட்டியுடன் எல்.என்.,புரத்தை இணைப்பதை எதிர்த்து மறியல்
பண்ருட்டியுடன் எல்.என்.,புரத்தை இணைப்பதை எதிர்த்து மறியல்
ADDED : டிச 28, 2024 05:41 AM

பண்ருட்டி: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் எல்.என்.புரம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி ஒன்றியம், எல்.என்.புரம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
காலை 9:00 மணிக்கு ஊராட்சி அலுவலகம் எதிரில் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் நடந்த மறியலில் ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் செல்வமணி தலைமையில் 100 பேர் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து 9:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.