/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் அரிசி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் அரிசி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 10, 2025 08:52 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரேஷன் அரிசி வழங்காததை கண்டித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் நகராட்சி, 3வது வார்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ரயில்வே குடியிருப்பு காலனி பகுதியில் உள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடி எண், 3ன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம், ரேஷன் அரிசி வழங்காமல், வெறும் சீட்டில் மட்டும் குறித்து கொடுத்து, அடுத்த மாதம் அரிசி வாங்கி கொள்ளலாம் என கடை விற்பனையாளர் கூறி, பொதுமக்களை அனுப்பி வந்துள்ளார்.
அதேபோல், இந்த மாதமும் அரிசி இல்லை என பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மூன்று மாதங்களாக வழங்காக நிலுவை ரேஷன் அரிசியை உடனே வழங்க வேண்டும் என கூறி, திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடையின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

