ADDED : டிச 10, 2025 08:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கம்மாபுரம் வட்டாரம், ஊ.கொளப்பாக்கம் கிராமத்தில் நெற்பயிரில் பண்ணைப் பள்ளி பயிற்சி நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமி ர்தராஜ், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் நெல் சாகுபடியில் தொழில் நுட்பங்கள், விதை நேர்த்தி, பயிர் பாதுகாப்பு, இயற்கை சாகு படி முறைகள், உர மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட விவசாயிகள், வேளாண் பயிற்சி மாணவிகள் பங்கேற்றனர்.

