/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் அருகே அரச மரம் அகற்றியதற்கு எதிர்ப்பு
/
கோவில் அருகே அரச மரம் அகற்றியதற்கு எதிர்ப்பு
ADDED : நவ 24, 2024 11:33 PM
கடலுார்; கடலுாரில் அரச மரம் அகற்றியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார், வண்டிப்பாளையத்தில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில், கண்ணகி நகர் குடியிருப்பு மக்கள் அரசமரம் வைத்து வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் அந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு தரப்பினர் நேற்று அகற்றினர். இதைக்கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து, மரத்தை அகற்றியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்தினர். அப்போது, அரச மரத்தை அகற்றிய நிலையில் மீண்டும் அங்கு பள்ளம் தோண்டி அரசமரம் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.