சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து 21ம் தேதி பா.ம.க., ஆர்ப்பாட்டம்
சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து 21ம் தேதி பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 18, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
கடலுார், செப் 18–
கடலுார் சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது.
கடலுார் கிழக்கு மாவட்ட பா.ம.க., ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சகாதேவன், ஆனந்தராஜா, முத்துக்குமரன், தயாளன், ரமேஷ், ஒன்றிய தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
மாநில பொருளாளர் தமிழரசன், செயற்குழு உறுப்பினர் விஜயகாந்தி, துணை தலைவர் ஆறுமுகம் பேசினர். மணி, விஜயவர்மன், பசுமை தாயகம் மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
