தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் அரவை துவங்க ஆர்ப்பாட்டம்

எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் அரவை துவங்க ஆர்ப்பாட்டம்

எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் அரவை துவங்க ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 17, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 05:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை விரைந்து துவங்க கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் அரவை துவங்குவதற்கான ஆயுத்த பணிகள் மற்றும் பருவ கால தொழிலாளர்களை பணி அமர்த்தி இயந்திரங்கள் பழுதுபார்ப்பு உள்ளிட்டவைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து இன்று (நவ.,17) மதியம் 1:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொ.மு.ச., செயலாளர் ராஜாராமன், கனகராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிவேல், நெடுஞ்செழியன், ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க செயலாளர் அறிவழகன், துணை செயலாளர் ரமேஷ், விடுதலை முன்னனி கண்ணன், வெங்கடேசன், ம.தி.மு.க,, தொழிற்சங்க செயலாளர் மோகன், பணியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியன், த.வெ.க., தொழிற்சங்க செயலாளர் சர்புதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலை அதிகாரிகள் யாரும் வராத நிலையில் மதியம் 1:30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us