/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்தவர் உடல் அடக்கம் செய்ய சாலை வசதி கோரி மறியல் முயற்சி
/
இறந்தவர் உடல் அடக்கம் செய்ய சாலை வசதி கோரி மறியல் முயற்சி
இறந்தவர் உடல் அடக்கம் செய்ய சாலை வசதி கோரி மறியல் முயற்சி
இறந்தவர் உடல் அடக்கம் செய்ய சாலை வசதி கோரி மறியல் முயற்சி
ADDED : நவ 04, 2025 01:32 AM

திட்டக்குடி: திட்டக்குடியில் இறந்தவரின் உடலை அடக்க செய்ய சாலை அமைத்து தரக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திட்டக்குடி நகராட்சி, கூத்தப்பன்குடிகாட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி கண்ணகி, 60. இவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இறந்தோர் உடல்களை வெள்ளாற்றங்கரையோரம் அடக்கம் செய்வது வழக்கம். அதன்படி, கண்ணகி உடலை அடக்கம் செய்ய நேற்று காலை 11:00 மணிக்கு ஏற்பாடுகள் செய்தனர். சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் நகராட்சி சார்பில் சிறுபாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் உடலை எடுத்துச் செல்ல சிரமம் ஏற்படுவதாகவும், அதனை சீரமைத்து தருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் 11:30 மணியளவில் திட்டக்குடி - தொழுதுார் சாலையில் சா லை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீசார் சமாதானம் செய்து சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தைனர்.
அதைத்தொடர்ந்து, நகராட்சி ஓவர்சீயர் சாம்பசிவம் தலைமையிலான ஊழியர்கள் தற்காலிக சாலை அமைத்தனர். அதன்பின்னர், சுடுகாடு பகுதிக்கு உடலை எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

