/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் வீடு கட்டித்தருவதாக ரூ.39 லட்சம் மோசடி: எஸ்.பி.,யிடம் புகார்

ADDED : நவ 04, 2025 01:32 AM
கடலுார்:  வீடு கட்டித்தருவதாக கூறி 39 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடலுார் பாதிரிக்குப்பம், மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வர் சம்பத்குமார், 10 பேருடன் எஸ்.பி.,யிடம் அளித்த மனுவில்; கடந்த 2023ம் ஆண்டு ராஜ்குமார் என்பவர் கோ ஆப் டெக்ஸ் அருகே கன்ஸ்ட்ரக் ஷன் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார்.
அவரது அலுவலகத்தில் உள்ளூர்வாசிகள் 4 பேர் மேலாளர், சூப்பர்வைசிஸ்யர் பணி செய்தனர். கிறிஸ்தவ ஊழியத்தின் பெயர் சொல்லி வீடு கட்டித்தருவதாக கூறி 50 குடும்பங்களிடம் இருந்து ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து கொண்டு திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இப்பகுதியில் இருந்து ஏழை மக்களிடம் 39 லட்சம் வரை வாங்கிக்கொண்டு வீடு கட்டித்தாராமல் மோசடி செய்துள்ளார்.
ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதியளித்தார்.