/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
/
ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ADDED : நவ 12, 2025 10:25 PM

விருத்தாசலம்: கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த ஊத்தாங்கால் கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்த 4 குடும்பங்களுக்கு, கடந்த 2023 - 24ம் ஆண்டு, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகட்ட நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடுகட்டும் பணியை, அப்போதைய பி.டி.ஓ., சங்கர், தனது சகோதரர் கான்ட்ராக்டர் ராஜாவிற்கு வழங்கியுள்ளார். ஆனால், இதுவரை அவர் வீடு கட்டும் பணியை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் மா.கம்யூ., கட்சி சார்பில், கம்மாபுரம் ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பி .டி.ஓ., மற்றும் கான்ட்ராக்டர் ராஜா ஆகியோர் அவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், வரும் ஜனவரி மாதத்திற்குள் கட்டுமான பணியை முடித்து தருவதாக கான்ட்ராக்டர் உறுதியளித்தார். இதனால், முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதில், மா. கம்யூ., கட்சி ஒன்றிய செயலர் கலைச்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், பழக்குடி மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கிளை செயலர் தமிழ்மணி, அன்பழகன், சுதாகர், விருதை ஒன்றிய செயலர் வசந்த் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற் றனர்.

