/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று இடம் கேட்டு போராட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு
/
மாற்று இடம் கேட்டு போராட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு
மாற்று இடம் கேட்டு போராட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு
மாற்று இடம் கேட்டு போராட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : மார் 25, 2025 10:02 PM

கடலுார் : கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நத்தவெளி ரோடு மக்கள் மாற்று இடம் கேட்டு குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார், பாதிரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட நத்தவெளி ரோட்டில் வசித்த 64 குடிசை வீடுகள் சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டு 7 ஆண்டுகளாகியும் மாற்று இடம் வழங்கவில்லை. இதனை கண்டித்து மா.கம்யூ., கட்சியினர் மற்றும் வீடுகளை இழந்தவர்கள் கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
தாசில்தார் பலராமன் பேச்சவார்த்தை நடத்தி அரசிபெரியாங்குப்பத்தில் 64 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதன்படி நேற்று காலை தாசில்தார் அரிசிபெரியாங்குப்பம் சென்றார். அங்கு, மா.கம்யூ., ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் மாதவன் உள்ளிட்ட நத்தவெளிரோடு மக்கள் திரண்டனர்.
தாசில்தார் பலராமன், உரிய முறையில் அளவீடு செய்து, பட்டா வழங்கப்படும் என்றார். அப்போது, அரிசிபெரியாங்குப்பம் கிராம மக்கள், எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றனர். ஒரே இடத்தில் இரு தரப்பினரும் திரண்டதால் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். அரிசிபெரியாங்குப்பம் கிராம மக்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்.
இதையடுத்து நத்தவெளி ரோடு மக்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., அபிநயா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பின்னர், போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.