/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலவச மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
/
இலவச மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 10, 2025 08:53 AM

விருத்தாசலம்: டி.வி.புத்துார் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச மனைபட்டா கேட்டு, ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்களுக்கு இலவச மனைபட்டா வழங்க கோரி, இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார். நகர செயலர் ராஜசேகர், தேன்மொழி, சுகன்யா, சுமதி, சுகன்யா, ஜானகி, சுகுணா, மஞ்சுளா, துர்கா, ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் கோகுலகிறிஸ்டீபன் கலந்து கொண்டு பேசினார். இதில், நிர்வாகிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதன்பின், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரயாவை சந்தித்து, மனைபட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

