/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பஸ் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சித் தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாண்டுரங்கன், பெரியசாமி, முருகேசன் முன்னிலை வகித்தனர்.
நாவலுார், பெருமுளை, கோடங்குடி காலனி பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.