/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி தொகுதியில் ஆர்ப்பாட்டம்
/
நெய்வேலி தொகுதியில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 13, 2026 05:09 AM

நெய்வேலி: கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பண்ருட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பாக காடாம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில், மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு, ஜீரோ நிதி ஒதுக்கீடு செய்ததையும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி நிலுவைத் தொகை, பேரிடர் நிதி உள்ளிட்ட திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்காமல் மாநிலத்தை புறக்கணிப்பதையும் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் பாலமுருகன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், வழக்கறிஞர் அரிதாஸ், இ.காங். கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன், த.வா.க., மணிகண்டன், அருள், முருகவேல், நவநீதன், ராசு, தேவகிருஷ்ணன், வி.சி., கட்சியைச் சேர்ந்த மருதமுத்து, உத்தமன், புருஷோத்தமன், ஆனந்தசேகர், சுந்தரமூர்த்தி, ஸ்டாலின், புஷ்பராணி, சி.பி.ஐ.,யை சேர்ந்த பாஸ்கர், வெங்கடேசன், சி.பி.எம்.,மை சேர்ந்த பாலமுருகன், காசி, லோகநாதன், மதிமுகவைச் சேர்ந்த செந்தில், சதானந்தம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

