/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் வராததை கண்டித்து விருதை அருகே மறியல்
/
குடிநீர் வராததை கண்டித்து விருதை அருகே மறியல்
ADDED : செப் 11, 2025 03:22 AM
விருத்தாசலம்: மன்னம்பாடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு, 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து, விருத்தாசலம் - மன்னம்பாடி சாலையில், மன்னம்பாடி பஸ் நிறுத்தத்தில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.