/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார்,சிதம்பரத்தில் காங்.,ஆர்ப்பாட்டம்
/
கடலுார்,சிதம்பரத்தில் காங்.,ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 07, 2025 05:59 AM

கடலுார் : கடலுார் மற்றும் சிதம்பரத்தில் வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார்: மத்திய மாவட்டத் தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, ரவிக்குமார், ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முகமது சபி, கிஷோர், காமராஜ், மகுல்ஜான், மணிகண்டன், பார்த்திபன், நகர நிர்வாகிகள் ரவிக்குமார், முருகன், குமார், வட்டார நிர்வாகிகள் ராஜா, ராமகிருஷ்ணன், சுந்தர், அலெக்சாண்டர், மகளிரணி மகாலட்சுமி, கல்பனா, மீனவர் பிரிவு கார்த்திகேயன் பங்கேற்றனர்.
சிதம்பரம்: முன்னாள் மாநில தலைவர் அழகிரி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.தெற்கு மாவட்ட காங்., தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார்.நகரதலைவர் மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத்குமார்,வட்டாரத் தலைவர்கள்செழியன்வைத்தியநாதசாமி முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர்கள் சித்தார்த்தன்,ஜெயச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், அப்துல் மாலிக், விவசாய சங்க தலைவர் இளங்கீரன் பேசினர்.
நிர்வாகிகள் அன்பு, ராஜாராம், ரங்கநாதன், திருவரசமூர்த்தி,மகளிர் அணி தில்லை செல்வி,அஞ்சம்மாள், டாக்டர் மஞ்சுளா, இந்திரா பங்கேற்றனர்.
நகர செயல் தலைவர் தில்லை குமார்நன்றி கூறினார்.

