/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 04, 2025 09:34 PM

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
தமிழ்க அரசு அதிகளவில் விளையாட்டு வீரர்கள் உருவாகிட வேண்டும் என்பதற்காகவும், தங்களது திறமைகளை வளர்த்து கொள்வதற்காகவும், மேம்படுத்தி கொள்வதற்காகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் கால்பந்து, நீச்சல், பேட்மிட்டன், டென்னீஸ், கபடி, கைபந்து, கூடைபந்து, தடகளம், டேக்வோண்டோ உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் பயனடைந்து வருகின்றனர். பயிற்சி மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு அரங்கத்தினை பராமரிக்க தேவையான பல்வேறு உபகரணங்களான மின்விளக்குகள், ஸ்டாக்கிங் நிவியா, கால்பந்து உபகரணங்கள், டென்னீஸ் விளையாட்டு உபகரணங்கள் உட்பட பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்களை கலெக்டரிடம் விருப்ப நிதியின் மூலம் 1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் மாணவ,மாணவிகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ், பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.