/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நோயாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கல்
/
நோயாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கல்
ADDED : ஜூன் 22, 2025 01:54 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கபடாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தற்போது விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காது கேட்கும் கருவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக, 5 நோயாளிகளுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் இந்துமதி, காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் ராஜ்குமார், அறுவை சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் அய்யப்பன், உதவி மருத்துவர்கள் பாலமுருகன் கோவிந்தராஜூ, ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.