/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு இழந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்
/
வீடு இழந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்
ADDED : அக் 26, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் நிவாரண உதவி வழங்கினார்.
கடலுார், நத்தப்பட்டு ஊராட்சி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி மனைவி லோகநாயகி. இவரது குடிசை வீடு, மழையால் இடிந்து சேதமானது. இவரது குடும்பத்திற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆலோசனைப்படி, டாக்டர் பிரவீன் அய்யப்பன், நிவாரண உதவி வழங்கினார்.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்துக்குமாரசாமி, மனோகர், முன்னாள் துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், முன்னாள் கவுன்சிலர் சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

