ADDED : அக் 01, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்கத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் குருசாமி வரவேற்றார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் கதிரவன், இயற்கை விவசாயி சிவக்குமார், வழக்கறிஞர் சந்தானமூர்த்தி, தாளாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நகர வர்த்தகர் சங்க செயலாளர் மணிவண்ணன் பேசினார்.
விவசாயிகளுக்கு மா, பலா, முந்திரி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பிரபு, முகமது இக்பால், முகமது அன்வர், பெரியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.