/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
ADDED : டிச 04, 2024 10:39 PM

சேத்தியாத்தோப்பு;
சேத்தியாத்தோப்பு தமிழ் மன்றம் சார்பில் ஓடாக்கநல்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், நோட்டு உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு தமிழ்மன்ற நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார்., அறங்காவலர் ஜெயந்தி, நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், கோபிநாதன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம். நோட்டு, பேனா, பரிட்சை அட்டை, குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கு தேவையான பென்சில், கிரயான்ஸ் மற்றும் வகுப்பறையில் மணி பார்ப்பதற்கு கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தமிழ் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.