/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 17, 2024 06:47 AM

கடலுார்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பேருக்கு நடை உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினர். இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 465 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.2,200 வீதம் மொத்தம் ரூ.13,200 மதிப்பீட்டில் நடை உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.
அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் ரமா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, முத்திரைத்தாள் துணை கலெக்டர் தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.