/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் ஜங்ஷனில் ரயில்களில் தண்ணீர் பிடிக்க ஏற்பாடு: ரூ.75 லட்சம் செலவில் இரவு பகலாக பணிகள் 'ஜரூர்'
/
கடலுார் ஜங்ஷனில் ரயில்களில் தண்ணீர் பிடிக்க ஏற்பாடு: ரூ.75 லட்சம் செலவில் இரவு பகலாக பணிகள் 'ஜரூர்'
கடலுார் ஜங்ஷனில் ரயில்களில் தண்ணீர் பிடிக்க ஏற்பாடு: ரூ.75 லட்சம் செலவில் இரவு பகலாக பணிகள் 'ஜரூர்'
கடலுார் ஜங்ஷனில் ரயில்களில் தண்ணீர் பிடிக்க ஏற்பாடு: ரூ.75 லட்சம் செலவில் இரவு பகலாக பணிகள் 'ஜரூர்'
ADDED : அக் 03, 2024 11:25 PM

கடலுார்: கடலுார் முதுநகர் ரயில்வே ஜங்ஷனில், 75 லட்சம் ரூபாய் செலவில், ரயில்களில் தண்ணீர் பிடிக்கும் வசதி ஏற்படுத்த பணிகள் நடந்து வருகிறது.
கடலுார் முதுநகர் முக்கிய ரயில்வே ஜங்ஷனாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இப்பாதை மீட்டர் கேஜாக இருந்தபோது, ஏராளமான ரயில்கள் சென்று வந்தன. அப்போது, கடலுார் முதுநகர் ஜங்ஷன் வழியாக செல்லும் ரயில்களுக்கு, இங்கு தண்ணீர் நிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற, 2007ம் ஆண்டு இவ்வழியாக ரயில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. 2010ம் ஆண்டு பணிகள் முடிந்து அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பிறகு, ரயில்கள் இயக்கினாலும், தண்ணீர் பிடிக்க முதுநகர் ஜங்ஷனில் வசதிகள் இல்லை.முழுவதும் ரத்து செய்யப்பட்டது.
அகல ரயில்பாதை துவங்கிய பின்னர், கடலுார் முதுநகர் ஜங்ஷன் வழியாக ஒரு சில பயணிகள் ரயில்களே சென்று வந்தன.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டவுடன் மீண்டும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக பயணிகள் ரயில்கள் இந்த பாதையில் சென்று வருகின்றன.
தற்போது, சென்னை-நாகர்கோவில், தாம்பரம்- தஞ்சாவூர், திருச்செந்துார், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் 25 ரயில்கள் செல்கின்றன.
கடலுார் முதுநகர்-மயிலாடுதுறை வழியாக மைசூருக்கு சமீபத்தில் புதிய ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் காலை நேரத்தில் கடலுார் முதுநகர் ஜங்ஷனுக்கு வருகிறது. மீண்டும் முதுநகர் ஜங்ஷனில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மைசூர் சென்றடைகிறது.
தொலைதுார ரயிலாக இருப்பதால் கடலுார் ஜங்ஷன் வரும்போது தண்ணீர் தீர்ந்துவிடுவதாக புகார் வந்தது. அதையொட்டி இந்த ரயிலுக்கு தண்ணீர் பிடிப்பதற்காக கடலுார் முதுநகர் ஜங்ஷனில் 75 லட்சம் ரூபாய் செலவில் தண்ணீர் பிடிக்கும் வசதி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் ரயில் நிலையத்தில் 600 மீட்டர் நீளத்தில் பைப் லைன் வசதி செய்யப்படுகிறது. ரயில நிலைய பகுதிகளில் நிலத்தடி தண்ணீர் உவர் நீராக இருப்பதால், கண்ணாரப்பேட்டையில் 900 அடி ஆழத்தில் போர்வெல் போடப்பட்டு அங்கிருந்து தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.
தற்போது பணிகள் இரவு பகலாக நடப்பதால், விரைவில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் நிறைவடைந்தால் முதுநகர் ஜங்ஷனில் மேலும் ஒரு வசதி கிடைப்பதால் அதிக ரயில்கள் வருவதற்கு வாய்ப்பாக அமையும் என, பொதுமக்கள் மத்தியல் எதிர்பார்ப்பு உள்ளது.