/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கல்
ADDED : டிச 16, 2024 07:03 AM

கடலுார்; கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார் பில் உதயநிதி பிறந்த நாளை யொட்டி, மாற்றுத் திற னாளிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கினார்.
உதயநிதி பிறந்த நாளையொட்டி, ஏற்கனவே 64 நபர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று கடலுார் கிழக்கு மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் செல்வகுமார், புவனகிரி மேற்கு ஒன்றியம், மிராலுார் செல்வராஜ் ஆகியோருக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கினார்.
புவனகிரி மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மதியழகன், சேத்தியாதோப்பு பேரூர் தி.மு.க., செயலாளர் பழனி, மனோகரன் ஆகியோர் உடன்இருந்தனர்.

