/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : ஜன 21, 2024 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் பள்ளி மாணவர்களுக்கு சேர்மன் ஜெயந்தி சைக்கிள் வழங்கினார்.
நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஆனந்தபாஸ்கரன் தலைமை தாங்கினார்.
உதவி தலைமையாசிரியர் இன்பராஜ் பிரபாகரன் வரவேற்றார்.
மாணவ, மாணவியர் 400 பேருக்கு சேர்மன் ஜெயந்தி சைக்கிள் வழங்கி, பேசினார். தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், துணை செயலாளர் பார்த்தசாரதி, கவுன்சிலர் புனிதவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

