/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவ பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
மருத்துவ பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : நவ 01, 2025 02:15 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி நுகர்வோர் உரிமை உரிமை பாதுகாப்பு பேரவை சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் பணியாளர்களுக்கு ரத்த அழுத்த இயந்திரம் வழங்கப்பட்டது.
கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பூங்கொடி தலைமை தாங்கினார்.
டாக்டர் சிவதங்கம், நெய்வேலி நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சங்க நிர்வாகிகள் ஆனந்தன், பாலாஜி, சிவசுப்ரமணியம், ஆனந்தன், உன்னிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மருந் தாளுநர் முருகப்பெருமாள் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவ முகாம் பணியாளர்களுக்கு 7 ரத்த அழுத்த பரிசோதனை இயந்திரம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நெய்வேலி தொழில் வர்த்தக சங்க தலைவர் பன்னீர்செல்வம், நுகர்வோர் பாதுகாப்பு பேரவைத் தலைவர் ராமச்சந்திரன், மருத்துவமனை பணியாளர்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

