ADDED : மார் 04, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகர தி.மு.க., சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
தலைமை கழக பேச்சாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். சேர்மன் ஜெயந்தி, அவைத் தலைவர் முசாதிக்அலி, துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, மனோகரி, பொருளாளர் ஜெயசீலன், மாவட்ட பிரதிநிதிகள் வேலு, வீரமணி, கதிரேசன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், துணை அமைப்பாளர்கள் ரிச்சர்ட் அலெக்சாண்டர், ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி தமிழன் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏழைகளுக்கு தையல் இயந்திரம், வேட்டி, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

