/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பி.டி.ஓ., முற்றுகை: குமராட்சி அருகே பரபரப்பு
/
பி.டி.ஓ., முற்றுகை: குமராட்சி அருகே பரபரப்பு
ADDED : டிச 29, 2024 06:16 AM

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி, சாலை பிரச்னை தொடர்பாக, பி.டி.ஓ., வை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது செட்டிக்கட்டளை ஊராட்சி. இங்கு, ரூ.18.61 லட்சம் மதிப்பில் உணவு தானிய கிடங்கு மற்றும் நியாய விலைக் கடை புதிய கட்டடத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை உதவி கலெக்டர் சரண்யா, எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன், குமராட்சி பி.டி.ஓ., சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியின்போது, செட்டிக்கட்டளை ஊராட்சியில் சமீபத்தில் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்துவிட்டதாக உதவி கலெக்டர் சரண்யாவிடம் மனு கொடுத்தனர். மனுவை குமராட்சி பி.டி.ஓ., சரவணனிடம் கொடுத்து, அவர் விசாரிக்க உத்தரவிட்டார்.
நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் சென்ற பிறகு, பி.டி.ஓ., சரவணன், ஊராட்சி தலைவரிடம் மனுவை கொடுத்து என்ன நடந்தது என கேட்டார். இதனை பார்த்த கிராம மக்கள் ஆத்திரமடைந்து, மனோகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் பி.டி.ஓ., சரவணன், இன்ஜினியரை முற்றுகையிட்டனர்.
புகார் குறித்து உங்களை அதிகாரிகள் விசாரிக்கி கூறினால் ஏன், ஊராட்சி தலைவரிடம் கொடுத்தீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர். பி.டி.ஓ.,க்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானம் செய்து, கூட்டத்தில் சிக்கிய பி.டி.ஓ.,வை மீட்டு, அனுப்பி வைத்தனர்.

