ADDED : நவ 09, 2024 08:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அலுவலகத்தில் புதிய பி.டி.ஓ., வாக செந்தில்வேல்முருகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்த பி.டி.ஓ., ராமமூர்த்தி கடந்த வாரம் பணி ஒய்வு பெற்றார். அவருக்கு பதில், கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக இருந்த பாலகிருஷ்ணன் பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இதையடுத்து துணை பி.டி.ஓ., வாக இருந்த செந்தில்வேல்முருகன் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஒன்றிய அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.