ADDED : பிப் 15, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : மேல்புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில், பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்றனர்.
மேல்புவனகிரி ஒன்றியத்தில் பி.டி.ஓ., வாக பணியாற்றிய சிவகுருநாதன், குமராட்சிக்கும், கீரப்பாளையம் பி.டி.ஓ., இப்ராஹிம், கடலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதையடுத்து, கடலுார் ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., வாக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற புனிதா, மேல்புவனகிரி ஒன்றியத்திற்கும், கடலுார் ஒன்றியத்தில் இருந்து வீரமணி, கீரப்பாளையம் பி.டி.ஓ.,வாகவும் நியமிக்கப்பட்டனர்.
இருவரும் நேற்று பொறுப்பேற்றனர்.

