/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமாரக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
/
குமாரக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குமாரக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குமாரக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : அக் 25, 2025 11:14 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி ஊராட்சி புதுத்தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடு ம்பங்கள் வசிக்கின்றனர். இத்தெருவுக்கு குடிநீர் சப்ளை செய்யும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மோட்டார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதானதால், குடிநீ ர் சப்ளை நிறுத்தப்பட்டது.
அப்பகுதி மக்கள் வெகுதுாரம் செ ன்று பஸ்நிறுத்தம் அருகே உள்ள மினி வாட்டர் டேங்க் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே உள்ள மினி வாட்டர் டேங்கிலிருந்து எடுத்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடர்ந்ந்து 15 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வராததால், ஆத் திரமடைந்த குமாரக்குடி புதுத்தெரு மக்கள் நேற்று காலை 9:30 மணிக்கு சென்னை-கும்பகோணம் சாலையில் மறியல் செய்தனர். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார் மறியல் செய்த மக்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினார்.
மேல்நிலை குடிநீர் தொட்டியை ஊராட்சி நிர்வாகம் பராமரிக்கவில்லை. மின்மோட்டார் பழுது நீக்கவும் முன்வரவில்லை. மழை காலங்களில் கொசு மருந்து அடித்தல், பிளிச்சிங்க் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
டி,எஸ்.பி., விஜிகுமார் ஒன்றிய அதிகாரிகளிடம் பேசினார். மின்மோட்டாரை விரைவில் பழுதுநீக்கி குடிநீர் சப்ளை செய்வதாக ஒன்றிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, 10.00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

