/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டியமல்லூர் பூவாலை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
குண்டியமல்லூர் பூவாலை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குண்டியமல்லூர் பூவாலை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குண்டியமல்லூர் பூவாலை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : நவ 01, 2024 06:09 AM

புதுச்சத்திரம்: குண்டியமல்லூர் - பூவாலை சாலையை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த குண்டியமல்லூர் -- பூவாலை பகுதியை இணைக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இணைப்பு சாலை உள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி வேளங்கிப்பட்டு, மணிக்கொல்லை, பால்வாத்துண்ணான், வல்லம், சேந்திரக்கிள்ளை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த,பொதுமக்கள் குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
அதைத்தொடர்ந்து 15 வது நிதிக்குழு சேமிப்பு நீதியிலிருந்து, 540 மீட்டர் தொலைவிற்கு சுமார் 15 லட்சம் மதிப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 610 மீட்டர் தொலைவிற்கு இன்னும் சாலை போடவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் தற்போது இப்பகுதியில் விவசாய பணிகள் தொடங்கி உள்ளதால், விவசாயிகள் விவசாய இடுபொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே மீதமுள்ள சாலையையும் சீரமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.