/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது வினியோக திட்ட குறைகேட்பு முகாம்
/
பொது வினியோக திட்ட குறைகேட்பு முகாம்
ADDED : அக் 20, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் நடந்தது.
முகாமிற்கு குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதுநிலை
வருவாய்ஆய்வாளர் ரம்யா, இளநிலை வருவாய்ஆய்வாளர் இளம்பிறை முன்னிலை வகித்தனர். கடலுார்
தாலுகாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் மற்றும் புதிய ரேஷன்கார்டு கேட்டு மனு கொடுத்தனர். மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களிலும் நேற்று குறைகேட்பு முகாம் நடந்தது.