/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம்
/
பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம்
ADDED : மார் 10, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம் நடந்தது.
கடலுார் மாவட்டத்தில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நேற்று குறைதீர்வு முகாம் நடந்தது.
கடலுாரில் நடந்த முகாமில், குடிமைப் பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் போன் இணைப்பு, நகல் ரேஷன் அட்டை, அங்கீகாரச் சான்று ஆகியவை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரம்யா, இளநிலை ஆய்வாளர் இளம்பிறை, ஆய்வாளர் விக்னேஷ் உடனிருந்தனர்.

