/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சந்திர கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம்
/
சந்திர கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம்
ADDED : செப் 08, 2025 03:02 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தொலைநோக்கி வழியாக, சந்திர கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.
கடலுார் மாவட்டத்தில் நேற்று இரவு முழு சந்திர கிரகணம் நடந்ததை முன்னிட்டு, பெரும்பாலான கோவில்கள் நடை சாத்தப்பட்டிருந்தது. இந்தியநேரப்படி இரவு 9:57 மணி முதல் நள்ளிரவு 1:27 மணி வரை நீடித்தது. சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில், காணப்படும் முழு சந்திர கிரகணம்11:42 மணி முதல் 12:33 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை காண்பதற்காக, கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தமிழ்நாடு இளையோர் விண்வெளி ஆராய்ச்சி மையம், இன்சாட் அறிவியல் சங்கம் மற்றும்முத்தமிழ் கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள், குழந்தைகளுடன் மஞ்சக்குப்பம்மைதானத்தில் திரண்டிருந்து டெலஸ்கோப் வழியாக முழு சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர்.