/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பசு மாடுகளுக்கு பெரியம்மை பொதுமக்கள் அச்சம்
/
பசு மாடுகளுக்கு பெரியம்மை பொதுமக்கள் அச்சம்
ADDED : நவ 03, 2025 05:14 AM
பரங்கிப்பேட்டை: பசு மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளுக்கு பெரியம்மை நோய் தாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட பசுமாடுகள் உள்ளன. இங்கு குறிப்பிட்ட சில பசு மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெரியம்மை நோய் தாக்கியது.
இந்த நோய் தற்போது, 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை தாக்கியுள்ளது. இந்த நோய் தாக்குதலுக்கு, 4 கன்றுக்குட்டிகள் இறந்துள்ளன.
இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கால்நடை டாக்டர்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டும் அடுத்தடுத்த பசு மாடுகளுக்கு பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
அதனால் பசு மாடுகளை தாக்கியுள்ள பெரியம்மை நோயை கட்டுப்படுத்த தச்சக்காடு கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

