/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பருவ மழை பொழிவு இயல்பை விட கூடுதல்
/
பருவ மழை பொழிவு இயல்பை விட கூடுதல்
ADDED : நவ 03, 2025 05:13 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பருவமழை அக்டோபர் மாதம் இயல்பை விட 47 கூடுதல் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை கடந்த அக்.,16ம் தேதி துவங்கியது. துவக்கத்திலேயே கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டது.
தற்போது சம்பா நடவு செய்து இளம் பயிராக உள்ளது. இத்தருணத்தில் மழை பெய்ததால் நடவு செய்த பயிற்கள் அழுகும் நிலை உள்ளது. மேலும் தொடர்மழையால் 11 வீடுகள் சுவர் இடிந்து சேதமானது. கனமழைக்கு 6 பேர் மற்றும் கால்நடைகள் பலியாகின.
இந்நிலையில் அக்டோபரில் 189.4 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கனமழையால் 277.8 மி.மீ., மழை பெய்துள்ளது. நவம்பர் மாதம் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

