ADDED : டிச 02, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
பெஞ்சல் புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று 2ம் தேதி நடைபெற இருந்த பொதுமக்கள் மக்கள் குறைகேட்பு கூட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.