/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் நகராட்சியில் நாளை சிறப்பு குழு கூட்டம் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
/
விருத்தாசலம் நகராட்சியில் நாளை சிறப்பு குழு கூட்டம் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
விருத்தாசலம் நகராட்சியில் நாளை சிறப்பு குழு கூட்டம் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
விருத்தாசலம் நகராட்சியில் நாளை சிறப்பு குழு கூட்டம் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : அக் 26, 2025 03:16 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி வார்டுகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும் வார்டு குழு சிறப்பு கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விருத்தாசலம் நகராட்சி (பொறுப்பு) ஆணையர் காஞ்சனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கி வரும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட அந்தந்த நகராட்சி சேர்மன் தலைமையில், நகராட்சி அலுவலர் ஒருவர் துணையுடன், அந்தந்த வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் வார்டு அளவில் கூட்டங்களை நடந்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, விருத்தாசலம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சிறப்பு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்து, அதில் மூன்று கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு வார்டு குழு கூட்டம் 2, 4, 5, 6, 7, 8, 12, 13, 17, 18, 20, 23, 24, 26, 29, 30, 33 ஆகிய வார்டுகளுக்கு 27ம் தேதியும், 1, 3, 9, 10, 11, 14, 15, 16, 19, 21, 22, 25, 27, 28, 31, 32 ஆகிய வார்டுகளுக்கு 28ம் தேதியும் நடக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் காலை 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு, அந்தந்த வார்டு பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

